கற்றதும் பெற்றதும்
ஏதோ தேடும் போது, சுஜாதா எழுதிய கடைசி கற்றதும் பெற்றதும் கண்ணில் பட்டது. சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு.
விகடனில் கற்றதும் பெற்றதும் முடிக்கும் போது, தற்காலிக முற்றும் மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்லுவார். இந்த முறை திடீர் என்று 'முற்றும்' போட்டார்.
ஏன் என்று பிறகு ஒரு சமயம் சொல்லுகிறேன். இப்போது படிக்க கடைசி பகுதி..
கம்ப்யூட்டரே, பதில் சொல்லு!
வயசாவதன் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று, சமீபத்திய ஞாபகங்கள் கண்ணாமூச்சி காட்டுவது. நினைவு இருப்பது போலிருக்கும்; வார்த்தை சிக்காது. இரண்டு நாட்களுக்கு முன், முகம்மது கைஃப் என்ற பெயர் சட்டென்று மறந்து போய், அதி-காலையில் ஒரு மணி நேரம் விழித்திருந்து யோசித்தேன். இந்த உபாதைக்கு நியூரான்களைப் புதுப்பிக்க மருந்து மாத்திரைகள் இருக்கிறதா? டாக்டர் ராமச்சந்திரன் போன்றவர்கள் சொல்லலாம்.
ஆனால், நான் கடைப்பிடிப்பது ஒரு நிச்சயமான மார்க்கம்... இன்டர்நெட்! ஞாபகம் வரவில்லை என்றால், அப்படியே விட்டு விட்டுக் காலை எழுந்ததும், கம்ப்யூட்டரைத் திறந்து google அலலது yahoo answers-ல் கேள்வி கேட்டால், கிடைத்துவிடும். இப்படித்தான் சாமர்செட் மாம் எழுதிய நான் படித்த மூன்றில் இரண்டு நாவல்களின் பெயர்கள் ஞாபக-மிருந்தன (Of Human Bondage, The Moon and Sixpence). மூன்றாவது பூச்சி பறந்தது. நெட்டில் கேட்டதில், சட்டென்று பதில்! The Razor’s Edge.
இணையம் இருக்கும் வரை இறப்பு இல்லை. அதில் தேடும் முறையை மறந்து-போய்விட்டால், ஏறக்குறைய சங்குதான்.
சாமர்செட் மாமின் நாவல்களை நான் எம்.ஐ.டி. படிக்கும்போது, க்ளாஸ் கட் அடித்து--விட்டுக்கூடப் படித்திருக்கிறேன். பால் கோகேன் என்னும் சித்திரக்காரரின் வாழ்க்கை சார்ந்த
கதையோ, சுயசரித்திரம் சார்ந்த கதையோ, தாமஸ் ஹார்டியின் வாழ்வைத் தழுவிய நாவலோ... மாமின் உரைநடையின் தெளிவு என் எழுத்தை ஒரு விதத்தில் பாதித்தது.
இப்போது படிக்கும்போது, அந்த நாவல்-கள் அப்படியொன்றும் ஓஹோ என்று தெரியவில்லை. Razors Edge நாவல் அப்போது போர் அடித்-தது. இப்-போது அதுதான் சிறந்த-தாகத் தெரிகிறது. மேற்கத்திய வாழ்வு அலுத்துப் -போய், ஒருவன் நிம்மதி தேடி இந்தியா-வுக்கு வந்து, ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் அமைதி காணும் கதை. சாமர்செட் மாம் எழுதிய எதையும் படித்திரா தவர்கள், அவருடைய Rain என்னும் சிறுகதையை மட்டும் படித்தால் போதும்.
-(0)-(0)-
திருமங்கையாழ்வாரின் காலத்தில் முதலில் கட்டப்பட்ட நீள்மதிலரங்கம் என்னும் திரு-வரங்கத்துக் கோயிலின் மதில் சுவர்கள் இப்போது சிதில-மடைந்து, காட்டுச் செடி பீறிட்டு உடைந்து-விழும் நிலை-யில் இருப்-பதை ராஜ் டி.வி-யில் காட்டி-னார்கள். இதைப் புதுப்-பிக்க ஒரு பிரபு மூணு கோடி ரூபாய் தந்திருப்ப-தாகவும், மதிலருகே வசிப்பவர்களைத் தற்-காலிக-மாக இடம் மாற்று-வதில்தான் பிரச்னை என்றும் சொன்னார்-கள்.
கோயிலை ஒட்டிய உத்தர வீதியின் மதில் சுவர்கள் பல அங்கங்கே சிதிலமாக இருப்ப-தையும், அவற்றுக்கருகே தற்காலிக அஸ்பெஸ்டாஸ் குடியிருப்புகள் முளைத்திருப்ப-தையும் சென்ற முறை பார்த்-தேன். இவற்றை யார் அனுமதித்-தார்கள், தெரியவில்லை! கோப்புகளை நோண்டிக் கண்டுபிடிப்பதற்குள் இம்மாதிரி-யான பிரச்னைக்கு உடனே கலெக்டரோ, கமிஷனரோ தீர்வு காண- வேண்டும். மதில் கல் இடிந்து யார் தலையிலா-வது விழும் வரை காத்திருக்கக்-கூடாது. பெரிய பெரிய கற்கள். உடனடி பரமபதம்
No comments:
Post a Comment