தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!
உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?
**********************
இந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத்தூக்கிப் போட்டுவிடு.
அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது
**********************
கர்ப்பக் கிரகம்
தன்னைத்தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?
நீ சொம்பில் நீரெடுத்து
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னை நானே
**********************
யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்!
"வேடந்தாங்கலுக்கு போகலாமா" என்றாய்.
ஆயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்தெல்லாம்
பறவைகள் வந்து அங்கே
குவியும் போது
அருகிலிருக்கும் நீ போகவில்லை
என்றால் அது சரணாலயமா என்ன ?!....
உறக்கத்திலிருந்து சட்டென்று
விழித்து பார்த்த போது
நீ அருகில் அமர்ந்து என்னையே
பார்த்துகொண்டிருந்தாய் ...
அப்புறம்
விழிப்பு வராதா என்ன .........
நாம் ஒன்றாய் சுற்றும் போது எதிர்படும் என் நண்பர்களிடம்உன்னை தோழியென்று அறிமுகப் படுத்த கஷ்டமாயிருக்கிறதுநீ எப்படி தான் சமாளிக்கிறாயோ....
நீ முகம் கழுவுகையில் ஓடிய
தண்ணீரை பார்த்து திடுக்கிடுவிட்டேன் நான்.
ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா
வேண்டாம் என்று
நீ நீரில் விடுகிறாய்!
ஒரு வண்ணத்துபூச்சி
காட்டி
கேட்கிறது
"ஏன் இந்த பூ நகர்ந்து கொண்டே இருக்கிறது
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்று சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்
குழந்தைகள் போன பிறகு
குடியிருப்பவன் நான் ...
குடைபிடிப்பது இயற்கைக்குஎதிரானது என்பதை - நீநனைந்து சிலிர்த்த அழகுதான் எனக்கு சொல்லிக்கொடுத்தது!
உன்னை காதலித்து கொண்டிருக்கும்போது
நான் இறந்து போவேனா
என்பது தெரியாது
ஆனால்
நான் இறக்கும் போதும்
உன்னை காதலித்துக்
கொண்டிருப்பேன் என்பது
மட்டும் தெரியும் !
என்னுடையது என்று நினைத்துதான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்
ஆனால் முதல்முறை உன்னை பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி போல
உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு
எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியது எனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே
அழகான பொருட்கள் எல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன !
உன்னை நினைவு படுத்துகிற எல்லாமே
அழகாய்தானிருக்கின்றன
உன்னிடம் எந்த கெட்ட பழக்கமும்
கிடையாது என்பது மகிழ்ச்சிதான்
எனினும் வருத்தமாய் இருக்கிறது .
நான் சொல்லி நீ விட ஒரு
கெட்ட பழக்கம் கூட இல்லையே !
என்னை நல்லவன் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்
அந்த நினைப்பில் மண் அள்ளி போட்டுவிடும் போலிருக்கிறது
உண் மீதான காதல்!
உன் வீட்டு முன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையை திருடிவரச்சொல்லி
நச்சரிக்கிறதே மனசு !
சிறுமியை போல்
கடல் அலையில் கால் நனைத்து
விளையாடிகொண்டிருந்தாய்
கடலோ
கொந்தளித்துக்கொண்டிருந்தது
எதற்காகநீ கஷ்டப்பட்டுக் கோலம்போடுகிறாய்..?
நேரம் உட்கார்ந்திரு,போதும்!
நீ ஊதித் தந்தபலூன் நான்.
எனக்குள் உன் காற்றுஇருக்கும்
வரைகாதல்என்னை விளையாடிக் கொண்டிருக்கும்.
நான்உன்னைக் காதலிக்கிறேன்.என்பதற்காகநீயும் என்னைக்காதலித்துவிடாதே!என் கொடிய காதலைஉன் பிஞ்சு இதயத்தால்தாங்க முடியாது
என்னை
அதிகாலையில்உன்
நின்றுஇந்த வீட்டில்
ஒரு
ஓடிவந்திருக்கிறேன்
புத்தர் இந்த உலகத்தில் தோன்றிஒரு மார்க்கத்தைத்தான்அமைத்துக் கொடுத்தார்.நீயோ என் எதிரில் தோன்றிஎனக்கொரு உலகத்தையேஅமைத்துக் என் மனதைக் கொத்தி கொத்திகூடு கட்டிகுடியும் ஏறிவிட்டமனங்கொத்திப் பறவை நீ
என் மனதைக் கொத்தி
கொத்திகூடு கட்டிகுடியும்
பறவை நீ
கடவுள் குடியிருக்கக் கோயிலாகக்கூடஇருந்துவிட முடியும்!ஆனால்,நீ குடியிருக்க வீடாக இருப்பதுமுடியவே முடியாது என்பதைநிரூபித்துக்கொண்டே இருக்கிறது நீ குடியிருக்கும்என் இதயம்!
நீ உன் முகத்தில்வந்து விழும் முடிகளைஒதுக்கி விடும் போதெல்லாம்உன் அழகு முகத்தைஆசையோடு பார்க்க வந்த முடிகளைஒதுக்காதே என்றுதடுக்க நினைப்பேன்.ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிறஅழகைப் பார்த்ததும்சிலையாக நின்று விடுகிறேன்.
காதல்தான்நான் செய்யும் தவம்.என் கடுந்தவத்தைக் கலைத்துஎன்ன வரம் வேண்டும் என்றுஎந்தத் தெய்வமும்என்னைக் கேட்காமலிருக்கட்டும்.
நான் எப்போதுஉன்னை நினைக்க ஆரம்பித்தேனோஅப்போதேஎன்னை மறந்து விட்டேன்.அதனால்தான் என் காதலைஉன்னிடம் சொல்லவேண்டும் என்கிறஞாபகம் கூட எனக்கு வரவில்லை.
என் தவத்தைவிடச்சிறந்ததாய்எந்த வரத்தையும்எந்தத் தெய்வத்தாலும்தந்துவிட முடியாது!
ஒரு தாய்தன் குழந்தைக்குச்சோறூட்டுகையில்நிலவைக் காட்டுவது மாதிரிகாதல்எனக்கு உன்னைக் காட்டியது.
நீ எப்போதும்தலையைக் குனிந்தேவெட்கப்படுவதால்உன் மதிப்புமிக்கவெட்கத்தையெல்லாம்இந்தப் பூமி மட்டுமே தரிசிக்கமுடிகிறது!
ஒரேயரு முறைகொஞ்சம் உன் தலையை நிமிர்த்திவெட்கப்படேன்... வெகுநாட்களாய்உன் வெட்கத்தைத் தரிசிக்கத்துடிக்கிறதுவானம்!
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment