Tuesday, July 22, 2008

பாரதியார்

இனியொரு விதி செய்வோம் - அதைஎந்த நாளும் காப்போம்தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில்ஜகத்தினை அழித்திடுவோம்
_________________________________________________________________
பத்துப் பன்னிரண்டு -
தென்னைமரம் பக்கத்திலே
வேணும் - நல்ல முத்துச்
சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை -
சற்றே வந்து காதிற் படவேணும்,
- என்றன் சித்தம்
மகிழ்ந்திடவே -
நன்றாயிளந் தென்றல் வரவேணும்.


பாட்டுக் கலந்திடவே -
அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் -
எங்கள் கூட்டுக் களியினிலே -
கவிதைகள் கொண்டுதர வேணும் -
அந்தக் காட்டு வெளியினிலே - அம்மா!
நின்றன் காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே -
இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.

_________________________________________________________________




நல்லதோர் வீணை செய்தே –
நலங்கெடப் புழுதியில்
எறிவதுண்டோசொல்லடி
சிவசக்தி -- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்



வல்லமை தாராயோ, --
இந்தமாநிலம் பயனுற
வாழ்வதற்கேசொல்லடி சிவசக்தி! --
நிலசுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

விசையுறு பந்தினைப் போல் -- உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கெட்டேன் -- நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்க்கேட்டேன்


தசையினை தீசுடினும் சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?


____________________________________________________________________



மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்


_____________________________________________________________________


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

____________________________________________________________________


தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியொடென்று சொன்னாய் வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குததடி....


_____________________________________________________________________



நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்

ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - போய்ச்
சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்-
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு


_______________________________________________________________________




வீழ்வது தவரல்ல..
ஆனால்..
எழ மறுப்பது குற்றம்..!
வீழ்ந்தவன் வீரனாவது
ஆச்சரியம் அல்ல..!
வெற்றியில் களிப்பு
கொள்ளாதிருக்கலாம்
ஆனால் தோல்வியில்
களைப்பு கொண்டு விடக்கூடாது..!
வெற்றி கொண்டவன் மட்டுமே
வாழ்வான் எனில்
வெற்றி என்பதே வாழ்வில் இராது..!
வெற்றி பெற்றதால்
வாழ்விர்க்கு மதிப்பு கூடலாம்..
ஆனால் தோல்வி இருந்தால் மட்டுமே
வெற்றிக்கு மதிப்பு சேரும்..!
பெண்ணாக பிறப்பது சிறப்பு..
ஆனால் உயிர் கொடுப்பதால் தான்
பெண் என்பவள் சிறப்பு..!
என் வாழ்வின் அனைத்துமே
வெற்றி தான் என்று ஒருவன்
சொல்வான் எனில்
அவன் இருளில் நின்று
இந்த உலகமே என் நிழலாக
உள்ளது என்பவன்..!
நான் வெற்றிக்கொண்டேன் என்றால்
நான் நிச்சயம் தோல்வியை
ருசித்திருக்கவேண்டும்..
ஆம்..தின்றவனுக்கு மட்டுமே
தெரியும்
நெல்லிக்கனியின் இனிப்பு..!
தோல்வியை வெற்றி கண்டவன்
வாழ்வை வெற்றி கொள்வான்..
தோல்வியை வெற்றி கொள்வதுஎளிது..!
தோல்வியை தோழனாக
ஏற்றுக்கொள்..!
வெற்றி பெறுவாய்
ஆஹா.. வென்று விட்டேன்..!
வாழ்வை வென்று விட்டேன்..!
என்று கூப்பாடு வேண்டாம்..
சற்று பொறு..
வெற்றி என்பது ஒரு போராட்டத்தின்
முடிவு மட்டுமல்ல..
மற்றொந்றின் தொடக்கமும் கூட..!

No comments: