Saturday, July 19, 2008

அறிவுமதி நட்புக்காலம்

அணு அணுவாய்ச் சாவதென 
முடிவெடுத்தப் பிறகு 
காதல் சரியான வழிதான் 

 

 

.உன் பிறந்த நாளுக்கான 
வாழ்த்து அட்டைகளில் 
நல்ல வரிகள் தேடித்தேடி 
ஏமாந்த சலிப்பில் 
தொடங்கிற்று 
உனக்கான 
என் கவிதை

நீ வயசுக்கு 
வந்தபோது 
தடுமாறிய 
என் 
முதல் கூச்சத்திற்க்குக் 
குட்டு வைத்து 
நம் நட்பைக் 
காப்பாற்றியவள் நீ 

 

உன்னுடன் 

சேர்ந்து நடக்க 
ஆரம்பித்த 
பிறகுதான் சாலயோர
மரங்களிலிருந்து உதிரும் 
பூக்களின் மௌனத்திலும்
இசை கேட்க ஆரம்பித்தேன் 
நான் 

காதலனுடன்
இருந்த போது
தாவணியை சரி
செய்தேன்

நண்பணோடு 
இருந்த போது
தாவணியை சரி
செய்தான்
4.கண்களை 
வாங்கிக்கொள்ள 
மறுக்கிறவள் 
காதலியாகிறாள் 



கண்களை வாங்கிக்கொன்டு 
உன்னைப் போல் 
கண்கள் தருகிறவள் தான் 
தோழியாகிறாள்

 

துளியே

கடல்

என்கிறது காமம்….

கடலும்

துளி

என்கிறது நட்பு!




வாழ்க்கை அநாகரிகமானதுதான் கடற்கரையின் முகம் தெரியாத இரவில் பேசிக்கொண்டிருந்த நம்மை நண்பர்களாகவே உணரும் பாக்கியம் எத்தனை கண்களுக்கு வாய்த்திருக்கும் ...........



அந்த நீண்ட பயணத்தில் என்தோளில் நீயும் உன் மடியில் நானும் மாறி மாறி தூங்கி கொண்டு வந்தோம் .. தூங்கு என்று மனசு சொன்னதும் உடலும் தூங்கி விடுகின்ற சுகம் நட்புக்குதானே வாய்த்திருக்கிறது....



ஒரு ஞாயிற்று கிழமை மதியத்தில் தாமதமாய் வந்து என்னை எழுப்பாமலேயே நீ சொல்லியபடி நான் சமைத்து வைத்திருந்த உணவை நிதானமாய் சாப்பிட்டுவிட்டு என் பக்கத்திலேயே வந்து படுத்து தூங்கிவிட்டும் போயிருக்கிறாய் என்பதை சொல்லிப் பரிகசித்தன என் தலையணையில் சில மல்லிகைகள் ....


No comments: