Thursday, July 24, 2008

எங்கோ படித்தது..

என்றாவது ஒரு நாள் ,
ஏழைகளுக்கு உணவளிப்போம்,
என்றாவது ஒரு நாள்,
பிச்சைக்காரர்களை அனுமதிப்போம்,
என்றாவது ஒரு நாள்,
லஞ்சத்தை தவிர்ப்போம்,
என்றாவது ஒரு நாள்,
ஆசிரியரை மதிப்போம்,
என்றாவது ஒரு நாள்,
தோல்வியை மறப்போம், 
என்றாவது ஒரு நாள்,
இதை கடைப்பிடித்தால்!


என்றாவது ஒரு நாள்,
மாறாதா இவ்வுலகம்?


______________________________________________________________________________________



கொஞ்சம் நாள் என்
அம்மாவை
பிரிந்திருந்த
ரணத்தின் பதிவு இது.
அம்மா!
உன்னைப்
பிரிந்திருந்த அந்த
சில நாட்களில்
நான் இழந்தது
எத்தனையோ!
இன்னும் நான்
மீளவில்லை அந்த 
பிரிவின்
துயரிலிருந்து
உன்னிடம் வந்து
சேர்ந்த பின்னும்.
எதைச் சொல்வேன்?
எதைவிடுவேன்?
நிச்சயம் நான்
பைத்தியமாகவே
ஆனேன்.
இன்னுமொரு பிரிவினை
நிச்சயம் என்னால்
தாங்க முடியாது.
இனியொரு
பிரிவென்றால் அது
உயிரின் பிரிவாக
இருக்கட்டும்



_____________________________________________________________________________________




மீண்டும் மீண்டும்
பூப்பதால்தான்
செடிகளும்...
புத்துணர்ச்சி 
பெறுகின்றன!

வெட்ட வெட்ட
தழைப்பதனால்தான்
மரங்களும்... 
விருட்சங்களாகின்றன!

இரவும் பகலும்
மாறி மாறி வருவதால்தான்...
நாட்களும்...
இனிமையாகின்றன!

வெற்றியிலும்,தோல்வியிலும்
முயற்சியினை தொடரும்
மனிதன்தான்...
சாதனையாளன் ஆகிறான்!


______________________________________________________________________________________





ரொம்ப முக்கியமாக
ரொம்பவே வேண்டியவருக்கு... 
போன் பண்ண வேண்டியிருந்தது.
பேலன்ஸ் இல்லாததால்
மிஸ்டு கால் பண்ணினான்
எப்படியும் பதில் வரும் எனும் நம்பிக்கையில்...
பதிலும் வந்தது மிஸ்டு காலாகவே!
புரிந்தது!
வேணும்னா அவன் பேசட்டுமே!
என்கிற எண்ணத்தில்... 
மீண்டும் இரு பக்கமும் தொடர்ந்தது...
மிஸ்டு காலாகவே!
கடைசி வரையிலும்...
கால் பண்ணவே இல்லை இருவரும்...
இப்பவும் இப்படித்தான்...
மிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்
பலரும்,
பல நண்பர்களையும்...
பல உறவுகளையும்...



_____________________________________________________________________________________


கற்றது நக்கல்

'சாக்ஸைத் துவைச்சுப் போடு' 
ஆனந்தியின் கடிதம் வந்தது 
இருடி,உன்னையே துவைக்கிறேன் 
ஸ்டாம்பு ஒட்டாமலா அனுப்புறே?! 



________________________________________________________________________________________--



எதிர் வீட்டில் 
பள்ளிக்கூடத்தில் 
கல்லூரியில் 
பணியிடத்தில் 
இணையப் பெருவெளியில் 
இடம் எதுவாயிருந்தாலும் 
நீங்களே புன்னகைக்கிறீர்கள் 
நலம் விசாரிக்கிறீர்கள் 
எண்களைப் பெற்று 
குறுஞ்செய்திகளால் குளிப்பாட்டுகிறீர்கள் 
காலநேரமின்றி வாயாடுகிறீர்கள் 
உங்கள் விருப்ப இடங்களுக்கு 
நாய்க் குட்டி போல் 
இழுத்துச் செல்கிறீர்கள் 
தொட்டுப் பேசுகிறீர்கள் 
சண்டையிடுகிறீர்கள் 
சபிக்கிறீர்கள் 
பின் எனை விட்டுப் பிரிகிறீர்கள் 
இந்த உலகம் 
என்னைப் 'பொறுக்கி' என்கிறது!




___________________________________________________________________________________

No comments: